Home நாடு 5ஜி அலைக்கற்றை வலைப்பின்னல் மலேசியாவில் தொடங்குகிறது

5ஜி அலைக்கற்றை வலைப்பின்னல் மலேசியாவில் தொடங்குகிறது

1151
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மலேசியாவுக்கான 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட முதல் வலைப்பின்னல் (நெட்வோர்க்) இன்று (நவம்பர் 10) முதல் அதிகாரபூர்வமாக அறிமுகம் காண்கிறது. இத்தனை நாட்களாக பல்வேறு கட்டங்களில் இந்தத் திட்டம் பரிசோதிக்கப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு இணைய வசதிகள் மேலும் விரைவாக சென்றடைய முடியும் என தொடர்பு, பல்ஊடக அமைச்சர் அனுவார் மூசா நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) அறிவித்தார்.

முதல் கட்டமாக கோலாலம்பூர், புத்ரா ஜெயா, சைபர் ஜெயா வட்டாரங்களில் இந்த 5 ஜி திட்டம் அறிமுகம் காண்கிறது. அதைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக விரிவாக்கப்பட்டு, நாட்டின் 36 விழுக்காட்டு வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான பினாங்கு, சிலாங்கூர், ஜோகூர், சபா, சரவாக் போன்ற மாநிலங்களுக்கு விரிவாக்கப்படும் என்றும் அனுவார் மூசா தெரிவித்தார்.