இத்தகைய பரிசோதனை முன்னோட்டங்கள் மூலம் 5ஜி அமுலாக்கம் சுமுகமாகவும், பிரச்சனையின்றியும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி திட்டத்திற்கு விவசாயம், வாகனங்கள், கல்வி, ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறை, சுகாதாரம், உற்பத்தித் துறை, பொதுப் பாதுகாப்பு, விவேக நகர் (ஸ்மார்ட் சிட்டி), ஆகிய துறைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தொடர்பு, பல்ஊடக ஆணையம் கோரியுள்ளது.
5ஜி அமைப்பை மேலும் செம்மைப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறியும் கருத்தரங்கம் ஒன்று அமைச்சுகளுக்கு இடையில் எதிர்வரும் ஜூன் 27-ஆம் தேதி தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5ஜி பயன்பாடு மற்றும் பலன்கள் குறித்து கொள்கை வகுப்போரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு துறைகளில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்பட்ட புதிய ஆலோசனைகளைப் பெறவும் இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு அமைச்சுகளுடன் கலந்தாலோசனை நடத்தி 5ஜி தொழில் நுட்பத்தை இணைந்து எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும் தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையம் ஆராயும்.