Home உலகம் ஹார்வார்ட் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் டாக்டர் சுப்ரா உரையாற்றுகிறார்

ஹார்வார்ட் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் டாக்டர் சுப்ரா உரையாற்றுகிறார்

2085
0
SHARE
Ad

ஹார்வார்ட் (அமெரிக்கா) – அமெரிக்காவிலுள்ள உலகின் முதல்நிலை பல்கலைக் கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்கி மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் சுகாதாரம் தொடர்பான அனைத்துலகக் கருத்தரங்கத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு முதன்மை உரையாளராக (Chief Key Note Speaker) உரையாற்றவிருக்கிறார்.

“தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகள்” என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தோல் மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சுப்ரா 2004-ஆம் ஆண்டு முதல் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக தீவிர அரசியலில் ஈடுபட்டு, 2008 முதல் 2013 வரை மனிதவள அமைச்சராகவும், 2013 முதல் 2018 வரை சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.

#TamilSchoolmychoice

டாக்டர் சுப்ரா மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருமாவார்.