Home நாடு “பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே!”- அன்வார்

“பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே!”- அன்வார்

830
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவி கைமாற்றுவது குறித்து தனக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

இந்த மாற்றம் குறித்த தேதிகள் எங்கள் இருவருக்கும் இடையில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார், அதன்படி நிறைவேற்றப்படும். நாம் எந்தவொரு பிரதமருக்கும் அவர்கள் தங்களது பணிகளை செய்து முடிப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும். அவரது அட்டவணைக்கு இடையூறு விளைவிக்காமல் திறம்பட ஆட்சி செய்ய இடம் கொடுக்கப்பட வேண்டும்என்று அவர் இன்று திங்கட்கிழமை கூறினார்.

பிரதமர் தாம் மூன்று வருடக் காலத்திற்குள் தமது பதவியினை விட்டுக் கொடுப்பது குறித்து வினவிய போது, அது வெறும் அனுமானம்தான் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.