Home நாடு 3 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்!- துன் மகாதீர்

3 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்!- துன் மகாதீர்

707
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த சனிக்கிழமை பாங்காக்கில் நடந்த உச்சநிலைமாநாட்டு நிகழ்ச்சி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

என்னைப் பொருத்தவரை, நான் பதவி விலகுவேன். அன்வார் எனக்குப் பின் பிரதமராக வருவார் என்று நான் வாக்குறுதியை அளித்துள்ளேன்என்று பிரதமர் சிஎன்பிசிக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறியப் பிறகும் மலேசியா கடன் பிரச்சனையிலிருந்து மீண்டதாக இருக்க வேண்டும். ஆகவே, இன்னும் மூன்று ஆண்டு காலங்களில் இந்நாட்டின் கடனை குறைப்பதற்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் , பிரதமர் மகாதீர் அப்பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருக்க மாட்டார் என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டிருந்தார்.