கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஒரு மகிழ்ச்சியான செய்தி.. நமக்கு குட்டி பாண்டா கரடி கிடைத்துவிட்டது.
ஆம்.. சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேசிய மிருகக் காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா கரடியான லயாங் லயாங் இன்று மதியம் 1.45 மணியளவில் குட்டியை ஈன்றது.
இந்தத் தகவலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது அதிகாரப்பூர்வ நட்பு ஊடகங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவை வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு பாண்டா கரடிகள் சீனாவில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டன.
கடந்த 2012 – ம் ஆண்டு சீனாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, இந்த இரண்டு பெரிய வகை பாண்டா கரடிகளையும் 10 ஆண்டுகள் பராமரிக்கும் வாய்ப்பை மலேசியா பெற்றது.