Home Featured உலகம் இன்று மாலை இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே!

இன்று மாலை இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே!

522
0
SHARE
Ad

ranil-wickremasinghe1 (1)கொழும்பு, ஆகஸ்ட் 18- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும், மீதமுள்ள 29 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

இந்தத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதிபர் சிறிசேனாவின் தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சிக்கும் இடையில் தான் பலத்த போட்டி. இதில் ராஜபக்சே  இலங்கை சுதந்திரா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அவர் தான் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராகப் பதவியேற்கிறார் என்று அந்நாட்டு அதிபர் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று மாலையே மிகவும் எளிமையான முறையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் இலங்கைப் பிரதமராகப் பதவியேற்கிறார்.