Home இந்தியா பிரணாப் முகர்ஜி மனைவி மறைவிற்கு மோடி, ஜெயலலிதா இரங்கல்!

பிரணாப் முகர்ஜி மனைவி மறைவிற்கு மோடி, ஜெயலலிதா இரங்கல்!

629
0
SHARE
Ad

pranab_1புதுடில்லி, ஆகஸ்ட் 18- இந்தியக்குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி இன்று காலை காலமானார்.

அவரது ஆன்மா அமைதி பெற இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “மறைந்த சவ்ரா முகர்ஜி, கலை, கலாச்சாரம், இசை ஆகியவற்றை அதிகம் நேசித்தவர்.

அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி மரணம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன்.

இந்தச் சூழ்நிலையில் எனது உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அவரது மறைவால் வாடும் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடியை அடையப் பிரார்த்திக்கிறேன்” என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.