Home Featured உலகம் பாங்காக்கில் மீண்டும் சம்பவம்: மர்ம மனிதன் வீசிய குண்டு வெடித்துச் சிதறியது!

பாங்காக்கில் மீண்டும் சம்பவம்: மர்ம மனிதன் வீசிய குண்டு வெடித்துச் சிதறியது!

555
0
SHARE
Ad

unnamedபாங்காக், ஆகஸ்ட் 18 – பாங்காக்கில் நேற்று குண்டுவெடித்த அதே பகுதியில் உள்ள செண்டரல் மார்கெட் அருகே இன்று மர்ம மனிதன் ஒருவன், வீசிய சிறிய ரக வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.

அதிர்ஷ்டவசமாக அந்தக் குண்டு சாவ் பிராயா ஆற்றில் விழுந்ததால், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து பாங்காக் குலோங்சன் பகுதியின் துணை காவல்துறைத் தலைவர் கோலோனெல் நாடாகிட் சிரிவோங்டாவான் கூறுகையில், “அந்தக் குண்டு ஆற்றில் விழுந்திருக்காவிடில் நிச்சயமாக பலருக்கும் காயத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice