Home நாடு பாங்காக் குண்டுவெடிப்பில் தொடர்பு: 4 மலேசியர்கள் உட்பட 8 பேர் கைது!

பாங்காக் குண்டுவெடிப்பில் தொடர்பு: 4 மலேசியர்கள் உட்பட 8 பேர் கைது!

1017
0
SHARE
Ad

bombblastகோலாலம்பூர் – பாங்காக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மலேசிய காவல்துறை, இன்று 8 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது. இந்த 8 பேரில், 4 பேர் மலேசியர்கள் என்றும், 4 பேர் வெளிநாட்டினர் என்றும் கூறப்படுகிறது. மேலும், கைதானவர்கள் பற்றி தாய்லாந்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது குறித்து கிளந்தான் மாநில காவல்துறை உயர் அதிகாரி நூர் ரஷீத் இப்ராகிம் கூறுகையில், “கைதானவர்களில் மலேசியப் பிரஜைகள் ஏற்கனவே வெளிநாட்டினரின் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்” என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் 17-ம் தேதி, பாங்காக்கின் எராவன் இந்து புனித தளத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 20 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.