Home உலகம் பாங்காக் குண்டு வெடிப்பு – விசாரணை வளையத்தில் இரு இந்தியர்கள்!

பாங்காக் குண்டு வெடிப்பு – விசாரணை வளையத்தில் இரு இந்தியர்கள்!

710
0
SHARE
Ad

bangkok1பாங்காக் – கடந்த 17-ம் தேதி, தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் உள்ள புனித தளத்தில், பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, இரு முக்கிய குற்றவாளிகளை தாய்லாந்து காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், இன்று இரு இந்தியர்களையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டினர் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் இந்த சம்பவத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான இரு வெளிநாட்டினர், தற்போது காவலில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல், குண்டு வெடிப்பு தொடர்பான கருவிகள் கண்டு பிடிக்கப்பட்ட அறைக்கு அருகிலேயே இவர்கள் இருவரும் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், இவை அனைத்தும் சந்தேகத்தின் பேரில் உள்ளதால், அவர்கள் இருவரின் பெயரையும் வெளியிட தாய்லாந்து காவல்துறை மறுத்துவிட்டது.