Home Featured நாடு மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

600
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

  • புத்ராஜெயா: காணாமல் போன அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் 1எம்டிபி வழக்குகள் எதனையும் கையாளவில்லை – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) முகமட் அபாண்டி கூறுகின்றார்
  • கோலாலம்பூர்: “நான் கேட்ட விளக்கங்கள் 6 மாதமாகியும் கிடைக்காத காரணத்தால் பதவி விலகினேன்” -1எம்டிபி ஆலோசகர் அப்துல் சமாட் அலியாஸ்
  • கோலாலம்பூர்: “பிரதமர், அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் சதியாலோசனையில் ஈடுபடவில்லை” -எட்ஜ் பத்திரிக்கை குழுமத்தின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
  • கோலாலம்பூர்: “பொது இடங்களில் கூடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சிவப்பு சட்டைக்காரர்களின் பேரணிக்கு அனுமதி கொடுங்கள்” பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா வேண்டுகோள்!
  • கோலாலம்பூர்: “சிவப்பு ஆடை பேரணிக்கு மசீச எதிர்ப்பு-இனப் பிரச்சனைக்கு வித்திடும்” – மசீச உதவித் தலைவர் சியூ மே ஃபான் உறுதி
  • கோலாலம்பூர்: பெர்சே பேரணியின் போது பதாகைப் படங்களைக் காலால் மிதித்ததற்காக இரண்டு பேர் காவல் துறையில் சரண்!
  • கோலாலம்பூர்: மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து பகாங் இளவரசர் தெங்கு அப்துல்லா விலகலாம் என ஆரூடங்கள்!