(வெள்ளிக்கிழமை மாலை வரையிலான உள்நாட்டு இறுதி நிலவரச் செய்திகள் – ஓரிரு வரிகளில்)
- “மலாய் ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்” என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் வெளியிட்ட கருத்து தொடர்பில் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் அவரிடம் காவல் துறையினர் நேரடியாக விசாரணை நடத்தினர்.
- பிகேஆர் கட்சியுடனான பாஸ் கட்சியின் அரசியல் ஒத்துழைப்பு, 14வது பொதுத் தேர்தலிலும் தொடரும் என பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் டத்தோ முஸ்தாபா அலி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் பிகேஆர் – பாஸ் இணைந்து பணியாற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியின் மருமகன் புதன்கிழமை இரவு மரணமடைந்தது தொடர்பில் அவருக்கு பல் சிகிச்சை அளித்த தனியார் பல் நிபுணத்துவ மருத்துவமனை அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், நன்கு அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் விளக்கம் தந்துள்ளது.
- இன்று மாலை கோலாலம்பூரிலும், தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் கடுமையான கடுமையான காற்றுடன் கூடிய சூறாவளி மழை பெய்ததில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதோடு, மோசமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன.