Home நாடு செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : அன்வார் பிரதமராக சத்தியப் பிரமாணம் கையெழுத்திட்ட அம்னோ நாடாளுமன்ற...

செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : அன்வார் பிரதமராக சத்தியப் பிரமாணம் கையெழுத்திட்ட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்

593
0
SHARE
Ad

அன்வார் பிரதமராக சத்தியப் பிரமாணம் கையெழுத்திட்ட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்

அடுத்த பிரதமராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட பகாங் மாநிலம் ஜெரண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் நஸ்லான் இட்ரிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

அன்வார் தனது சுயநலத்துக்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது

வான் சைபுல் வான் ஜான்

நாடாளுமன்றம் கூடும்போது அன்வார் தனது சொந்த நலன்களுக்காகவும், தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்காகவும் நாடாளுமன்றத்தை ஒரு களமாகப் பயன்படுத்தக் கூடாது என பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் அறிக்கை ஒன்றின் வழி கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழிகாட்டுதல்கள்

இரண்டு அளவைகள் கொண்ட முழு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை விரைவில் அரசாங்கம் வெளியிடும் என கொவிட் தடுப்பூசிக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

ராய்ஸ் யாத்திம் புதிய சட்டத்துறை அமைச்சராக லிம் குவான் எங் பரிந்துரை

#TamilSchoolmychoice

நடப்பு சட்டத்துறை அமைச்சர் பாஸ் கட்சியின் தக்கியூடின் ஹாசானுக்குப் பதிலாக, தங்களுக்கு எதிராக நேர் எதிர் அரசியல் நடத்தும் பெர்சாத்து கட்சியின் சார்பில்  நடப்பு நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திம் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் பரிந்துரைத்துள்ளார்.

5 மாநிலங்கள் 2-வது கட்ட மீட்சி நிலைக்கு முன்னேற்றம்

மொத்த கொவிட் தொற்று எண்ணிக்கைகள் குறைந்தது, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளை முறையாக நிருவகிப்பது, அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் போட்டது ஆகியவை காரணமாக 5 மாநிலங்கள் மீட்சி நிலைத் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறுகின்றன என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.