Home நாடு மலேசியாவுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கிய அமெரிக்கா

மலேசியாவுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கிய அமெரிக்கா

529
0
SHARE
Ad

கோலாலம்பூர் : உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு ஒரு மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.  இந்த தடுப்பூசிகள் பிபைசர் ரகத்தைச் சேர்ந்ததாகும்.

இந்த தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) காலை கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது.

அமெரிக்காவின் உதவிக்கு வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் குறித்துக் கருத்துரைத்த மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர்  பிரியான் டி.மேக்பீட்டர்ஸ் (Brian D. McFeeters தடுப்பூசிப் போடும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு மலேசியாவிற்கு உதவி செய்ய அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கொவிட் தொற்றுகளை எதிர்த்துப் போராட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 80 மில்லியன் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்க ஜோ பைடன் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மலேசியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் 1 மில்லியன் தடுப்பூசிகள் அதில் ஒரு பகுதியாகும்.

ஜூலை மாதத்திற்குள்ளாக 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகளைப் பெறும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.