Home நாடு செல்லியல் ஒருவரிச் செய்திகள்: மொகிதின் பதவி விலகவில்லை – பிரதமர் துறை அலுவலகம் மறுப்பு

செல்லியல் ஒருவரிச் செய்திகள்: மொகிதின் பதவி விலகவில்லை – பிரதமர் துறை அலுவலகம் மறுப்பு

719
0
SHARE
Ad

பிரதமர்பதவி விலகவில்லை

பிரதமர் பதவி விலகி விட்டார் எனப் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் இன்னும் பிரதமராகப் பதவியைத் தொடர்கிறார் என்றும் பிரதமர் துறை அலுவலகம் நேற்று சனிக்கிழமை(ஜூலை 10) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மொகிதின் பதவி விலக பிரச்சாரம் தொடங்கியது

நேற்று ஜூலை 10 முதல் நேரடியாகவும், இணையம் வழியும் கொவிட் தொற்று பரவலை முறையாகக் கடைப்பிடிக்காத அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் ஒன்றை #Lawan என்ற பின்தொடர் தலைப்போடும், பிரதமர் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும், அவசரகாலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளோடும், செக்ரேடெரியட் சொலிடாரிட்டி ராயாட் (Sekretariat Solidariti Rakyat-SSR) என்ற இயக்கம் தொடங்கியிருக்கிறது.

அம்னோ உச்சமன்ற முடிவுக்கு கேமரன் மலை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவு

பூர்வ குடிமக்களின் பிரதிநிதியாக கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் ஒரே பூர்வகுடி நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழும் ரம்லி முகமட் நோர் அம்னோ உச்சமன்ற முடிவுக்குக் கட்டுப்பட்டு தேசியக் கூட்டணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

டுரியான் விற்பனையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்

#TamilSchoolmychoice

பத்துமலை வட்டாரத்தில் டுரியான் கடை வைத்திருக்கும் உரிமையாளர் நடமாட்டக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு மாறாக கூடுதலான ஊழியர்களைப் பணியில் வைத்திருந்த காரணத்தால் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்.

சரவாக் ஜிபிஎஸ், மொகிதின் யாசினுக்கு ஆதரவு

மொகிதின் யாசினின் பிரதமர் பதவி ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் அவருக்கான ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கிறார் சரவாக் முதலமைச்சரும், சரவாக் கட்சிகளின் ஆளும் கூட்டணியான ஜிபிஎஸ் என்னும் கூட்டணியின் தலைவருமான அபாங் ஜோஹாரி.