Home கலை உலகம் சிறுத்தை சிவா இயக்கும் அஜித்தின் புதுப்படப் பெயர் அடங்காதவன்!

சிறுத்தை சிவா இயக்கும் அஜித்தின் புதுப்படப் பெயர் அடங்காதவன்!

869
0
SHARE
Ad

06-1441532344-ajith-lakshmi-menonசென்னை – ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதுப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. ஆனால் இன்னும் படத்திற்குப் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப்படத்துக்கு ஆரம்பத்தில்‘வரம்’ என்றும், அதன்பின்பு ‘வெட்டிவிலாஸ்’ என்றும் தலைப்பு வைக்கப் போவதாகப் பேச்சு அடிபட்டது. ஆனால் அது பற்றிய எந்த அறிவிப்பும் வரவில்லை.

இந்நிலையில் தற்போது படத்திற்கு ‘அடங்காதவன்’ என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

படத்தின் பெயர் மற்றும் படத்தின் முதல் பார்வை இரண்டையும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப் படக்குழுவினர்  முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.