Home உலகம் உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

610
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

  • பேங்காக்: தாய்லாந்து எரவான் ஆலய குண்டு வெடிப்பு – சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிப்பு!
  • சிங்கப்பூர்: மலேசியக் காரிலிருந்து, வரி செலுத்தப்படாத,  4,050 பெட்டிகள் (கார்ட்டன்ஸ்) சிகரெட்டுகள் துவாஸ் சுங்கச் சாவடியில் கைப்பற்றப்பட்டது
  • வத்திகான்: “கத்தோலிக்கர்கள் அனைவரும் அகதிகளுக்கு அடைக்கலம் தரவேண்டும்” போப்பாண்டவர் அறைகூவல்!
  • இஸ்தான்புல்: குர்திஷ் பிரிவினைவாதிகளின் முகாம்கள் நோக்கி துருக்கிய விமானப்படை தாக்குதல் நடத்தின!
  • பாரிஸ்: அகதிகள் பிரச்சனையை உருவாக்கியுள்ள சிரியா நாட்டின் மீது விமானப் படை தாக்குல்களை நடத்த பிரான்ஸ் ஆயத்தம்!
  • இலண்டன்: புதன்கிழமையோடு, விக்டோரியா மகாராணியை விட நீண்ட காலம் ஆட்சி செலுத்திய மகாராணியாக பிரிட்டன் வரலாற்றில் இடம்பிடிக்கும் எலிசபெத் மகாராணியார்!
  • இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் மூலம் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  • பேங்காக்: தாய்லாந்து வான வெளியில் நெருப்புப் பந்துகள் – விண்வெளிக் கற்களின் வெடிப்புகளா?
  • பேங்காக்: தாய்லாந்து மன்னருக்கு நெஞ்சுப் பகுதியில் நோய்த் தொற்றுக்காக சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது – அரண்மனை தகவல்