Home Featured உலகம் உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

609
0
SHARE
Ad

Pope Francis and Cuba's Fidel Castro shakes hands,

ஹவானா: பத்து நாட்களுக்கான அமெரிக்கா-கியூபா நாடுகளுக்கான வருகையின் முதல் கட்டமாக போப்பாண்டவர் பிரான்சிஸ் சனிக்கிழமை கியூபா வருகை – இதுவே ஒரு போப்பாண்டவரின் முதல் கியூபா வருகையாகும்.

ஹவானா: கியூபா தலைநகர் ஹவானாவில் பொதுமக்கள் கலந்து கொண்ட பிரார்த்தனைக் கூட்டம் நடத்திய போப்பாண்டவர், சுமார் 40 நிமிடங்கள் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் சரித்திரப் பிரசித்தி பெற்ற சந்திப்பு!

#TamilSchoolmychoice

மெக்கா: நாளை தொடங்கும் புனித ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ள மெக்காவில் குழுமியுள்ள இலட்சக்கணக்கான பயணிகளின் பாதுகாப்புக்காக ஒரு இலட்சம் படையினர் பணியில் ஈடுபடுவர் என சவுதி அரேபியா அறிவிப்பு

ஹாமில்டன் (நியூசிலாந்து) : நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரிலுள்ள மிருகக் காட்சி சாலையின் காப்பாளரை புலி அடித்துக் கொன்றது – பதிலுக்கு புலியைக் கொல்லக் கூடாது என மிருகவதை எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி!

பாரிஸ்: தோளில் பையுடன் காணப்பட்ட சந்தேக நபரினால் சில மணி நேரங்கள் மூடப்பட்ட பாரிஸ் நகரின் ஐஃபில் கோபுரம் மீண்டும் சுற்றுப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.

பெஷாவார்: இங்குள்ள இராணுவத் தளத்தின் அருகில் உள்ள பள்ளிவாசல் மீது தலிபான் தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 29 பேர் மரணம்!