Home Featured நாடு பாண்டா குட்டிக்காக சீனாவிற்கு 2.54 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறது அரசு!

பாண்டா குட்டிக்காக சீனாவிற்கு 2.54 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறது அரசு!

846
0
SHARE
Ad

liangliangzooகோலாலம்பூர் – மலேசியாவில் பாண்டா குட்டி பிறந்ததை முன்னிட்டு, சீனாவின் பாண்டா சமூகத்திற்கு 600,000 அமெரிக்க டாலர் (2.54 மில்லியன் ரிங்கிட்) பரிசாக வழங்குகிறது அரசாங்கம்.

இது குறித்து இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் கூறுகையில், அனைத்துலக பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்ட ஒப்பந்தத்தின் படி, சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு பாண்டாக்களான லியாங் லியாங் மற்றும் சியாங் சியாங்காக இந்த “பிறந்தநாள் பரிசு” வழங்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

“பாண்டா குட்டி பிறந்ததும், அதை தத்தெடுத்துள்ள நாடு பாண்டா சமூகத்திற்காக பரிசு வழங்க வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகராக நமது மலேசிய ரிங்கிட் சரிந்துள்ள நிலையில், அவர்களுக்கு தொகை சற்று கூடுதலாகச் செல்லும்”

#TamilSchoolmychoice

“ஆனால், நீங்கள் வேறு கோணத்தில் இதைப் பார்த்தால், பாண்டாவை நாம் மலேசியாவிற்குக் கொண்டு வந்தது முதல் தேசிய மிருகக் காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது”

“எனவே, உண்மையில், நமக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று நேற்று தேசிய மிருகக் காட்சி சாலையிலுள்ள பாண்டா பராமரிப்பு மையத்தை அதிகாரப்பூர்வமாகப் பார்வையிட்ட பின்னர், வான் ஜூனைடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.