Home Featured இந்தியா இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானார்!

இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானார்!

654
0
SHARE
Ad

Jagmohan Dalmiyaகொல்கத்தா – மூன்று நாட்களுக்கு முன்பாக நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா நேற்று இரவு இந்திய நேரப்படி 8.45 மணியளவில் காலமானார்.

அவருக்கு வயது 75. கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அண்மையில் சர்ச்சைக்குள்ளான இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசனுக்குப் பதிலாக தலைமைப் பொறுப்பை டால்மியா ஏற்றிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்திய கிரிக்கெட் விளையாட்டையும், அதற்குப் பொறுப்பேற்று நடத்தும் கிரிக்கெட் சங்கத்தையும், கோடிகளில் புரளும் பணக்கார மையங்களாக உருவாக்கியதில் டால்மியா கடந்த காலங்களில் மிக முக்கிய பங்கு வகித்தார்.