Home Featured நாடு புகைமூட்டம்: நாடு முழுவதும் காற்றுத்தரம் இயல்பு நிலைக்கு திரும்பியது!

புகைமூட்டம்: நாடு முழுவதும் காற்றுத்தரம் இயல்பு நிலைக்கு திரும்பியது!

721
0
SHARE
Ad

haze klang valleyகோலாலம்பூர்- காற்றின் தரம் நாடு முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காற்று மாசுக் குறியீட்டுப் புள்ளி பெரும்பாலான பகுதிகளில் மிதமாகவே இருந்தது. எந்தப் பகுதியிலும் மாசுக் குறியீட்டுப் புள்ளி உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை.

சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குவாந்தானில் உள்ள பாலோக் பாரு (பகாங்) பகுதியில் மட்டும் மாசுக் குறியீட்டு எண், ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் 101 புள்ளியாக ஆக இருந்தது.

45 இடங்களில் மாசுக் குறையீட்டுப் புள்ளி மிதமாகவும், செரி மஞ்சுங் (பேராக்) பகுதியில் மட்டும் 95 புள்ளியாகப் பதிவானது என்றும் சுற்றுச்சூழல் துறை இணையதளம் தெரிவிக்கிறது. சபா மற்றும் சரவாக்கில் பெரும்பாலான இடங்களில் மாசுக் குறியீட்டுப் புள்ளி மோசமாக இருந்தது.

#TamilSchoolmychoice

மாசுக் குறியீட்டுப் புள்ளி 50 புள்ளிகளுக்கும் குறைவாக இருப்பின் காற்றின் தரம் சிறப்பாக உள்ளதாக அர்த்தமாகும். 51 முதல் 100 புள்ளிகள் வரை பதிவானால், அது காற்றின் தரம் மிதமாக உள்ளதாக அர்த்தம்.

101 முதல் 200 புள்ளிகளுக்குள் பதிவானால் அது ஆரோக்கியமற்ற நிலை. 200க்கும் மேற்பட்ட புள்ளிகள் காணப்படின் அது மோசமான நிலை. 300க்கும் மேல் இருப்பின் அது ஆபத்தான நிலையாகும்.

கடந்த வாரம் முழுவதும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மலேசியாவில் புகைமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பல விமானங்களின் புறப்பாடு, வருகை ஆகியவற்றில் நேரமாற்றம் செய்யப்பட்டது.