Home நாடு புகைமூட்டம் – காற்று தூய்மை கேடு – மீண்டும் மலேசிய வான்வெளி பாதிப்பு

புகைமூட்டம் – காற்று தூய்மை கேடு – மீண்டும் மலேசிய வான்வெளி பாதிப்பு

375
0
SHARE
Ad
புகை மூட்டம் (கோப்புப் படம்)

கோலாலம்பூர் : அண்டை நாடான இந்தோனேசியாவில் எழுந்த புகைமூட்டம், கடல் கடந்து சிங்கப்பூர் மலேசியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்திருப்பதோடு காற்றின் தூய்மை கேடு அளவு வெகுவாக பாதிப்படைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக  கோலாலம்பூர், செராஸ் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ஏ பி ஐ API எனப்படும் காற்றின் தூய்மை கேடு அளவு மிக அதிகமாக 164 புள்ளிகள் என்ற அளவில் இங்கு பதிவாகி இருக்கிறது.

அதனை அடுத்து டிகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நீலாய், சிரம்பான் வட்டாரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புத்ரா ஜெயா, பெட்டாலிங் ஜெயா, பந்திங், ஜோஹான் செத்தியா வட்டாரங்களும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள போர்ட்டிக்சன், மலாக்காவில் உள்ள புக்கிட் ரம்பாய் கோலாலம்பூர்பத்து மூடா வட்டாரங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

காற்று தூய்மை கேடு புள்ளிகள் நூற்றுக்கும் அதிகமான அளவில் பதிவான பகுதிகளாக சிலங்கூரில் கிள்ளான், மலாக்காவில் அலோர் காஜா, பேராக்கில் தைப்பிங், பினாங்கில் செபராங் ஜெயா, ஜோகூரில் தங்காக் ஆகிய பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன.