பாங்காக்: ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) உலகின் மிக மாசடைந்த நகரமாக சியாங் மாய் விளங்கியதாக ஐ.க்யூ ஏர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிக காற்று மாசுபட்ட 10 நகரங்கள்: சியாங் மாய், டாக்கா, யாங்கோன், காபூல், புது டில்லி, ஜாக்ரெப், கொல்கத்தா, வுஹான், காத்மாண்டு மற்றும் பெல்கிரேட் ஆகும்.
முன்னதாக, புவியியல் தகவல் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் சனிக்கிழமையன்று தாய்லாந்தில் 1,735 தீ எரியும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அவற்றில் 570 இடங்கள் மே ஹாங் சோன் மாகாணத்திலும், 278 சியாங் மாயிலும், 193 லம்பாங் மாகாணத்திலும் உள்ளன.
“ஞாயிற்றுக்கிழமை தரத்தை மீறிய பகுதிகள்: சியாங் மாய், லம்பாங், சியாங் ராய், மே ஹாங் சோன், நான், லம்பூன், பிரே, பயாவோ, தக், உபோன் ராட்சதானி, கம்பேங் பெட் மற்றும் சுகோதாய் மாகாணங்கள்,” என்று அவ்வறிக்கை கூறியுள்ளது.