Home One Line P1 புகைமூட்டத்திற்கு உள்ளூரில் திறந்த வெளியில் எரிப்பதே காரணம்

புகைமூட்டத்திற்கு உள்ளூரில் திறந்த வெளியில் எரிப்பதே காரணம்

592
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் சில பகுதிகளில் ஏற்படும் புகைமூட்டம் உள்ளூரில் திறந்தவெளியில் எரிப்பதால், ஏற்படுகிறது என்று மலேசியா வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.

குறைவான மழை மற்றும் திறந்த வெளியில் எரிப்பது நடவடிக்கைகள் ஆரோக்கியமற்ற காற்று மாசுபாட்டுக் குறியீட்டிற்கு பங்களித்தன என்று அவர் கூறினார்.

” நாம் அதிகம் (தாவரங்களை) நடவில்லை, அதற்கு பதிலாக தோட்டத்தை சுத்தம் செய்வதற்கு திறந்த வெளியில் எரியூட்டுகிறோம். எனவே இது உள்ளூர் புகைமூட்டத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

எனவே, திறந்த வெளியில் எரிப்பதை குறைக்க வேண்டும் என்றும் போதுமான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மெட்மலேசியா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு தற்போது வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்டத்தில் உள்ளது என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது. இது 2021 மார்ச் நடுப்பகுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில், தீபகற்ப மலேசியாவில், குறிப்பாக தீபகற்பத்தின் வடக்கில் மழை குறைவாக இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு அசாதாரண வெப்ப வானிலை ஏற்படும் என்று மெட்மலேசியா எதிர்பார்க்கவில்லை.

இன்று காலை காற்று மாசுபாடு குறியீட்டின் (ஐபியு) அடிப்படையில், சிலாங்கூரில் மூன்று பகுதிகள் ஆரோக்கியமற்ற அளவீடுகளை பதிவு செய்துள்ளன. ஜோஹன் செத்தியா 183 குறியீட்டையும், அதன்பின்னர் பந்திங் (165) மற்றும் பெட்டாலிங் ஜெயா (141) குறீட்டையும் பதிவு செய்துள்ளன.