கோலாலம்பூர்: இன்ஸ்டிட்யூட் டாருல் ஏசான் (ஐடிஇ) நடத்திய வாக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 19 விழுக்காட்டினர் மட்டுமே மொகிதின் யாசின் நாடாளுமன்ற தவணை முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி (46 விழுக்காட்டினர்) பேர் மொகிதின் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அவர் இனி பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 29 விழுக்காட்டினர் புதிய பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மற்ற இரண்டு சதவிகிதத்தினர் மொகிதின் அதிகாரத்தில் இருக்க அவசரகால அறிவிப்பை தொடர வேண்டும் என்று கூறினர்.
நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியை அடுத்து, அதன் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28 வரை இயங்கலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ஐடிஇ கூறியது.
ஐடிஇ ஆராய்ச்சி பிரிவின் மூத்த மேலாளர் கைருல் அரிபின் முகமட் முனீரை தொடர்பு கொண்டபோது, 8,352 பேர் இயங்கலையில் பதிலளித்ததாக மலேசியாகினியிம் கூறியுள்ளார்.