Home நாடு வானிலை எச்சரிக்கை  : இடியுடன் கூடிய கன மழை; புயல் காற்று

வானிலை எச்சரிக்கை  : இடியுடன் கூடிய கன மழை; புயல் காற்று

546
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை வரையில் 8 மாநிலங்களில் வானிலை மோசமாக இருக்கும் என மலேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த புயல் காற்றும் வீசுமெனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கெடா, பேராக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, சரவாக், சபா ஆகியவையே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த 8 மாநிலங்களாகும்.

#TamilSchoolmychoice

கெடாவில் கூலிம், பண்டார் பாரு, பேராக் மாநிலத்தில் லாருட், மாத்தாங், செலாமா, கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பத்தாங் பாடாங், முவாலிம் ஆகியவையே பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படும் வட்டாரங்களாகும்.

பகாங்கில் கேமரன் ஹைலண்ட்ஸ், சிலாங்கூரில் உலு சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் ஜெலுபு, சிரம்பான், கோலப்பிலா, ரெம்பாவ் ஆகிய பகுதிகள் மோசமான மழையால் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.