Home நாடு அடைமழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை! எங்கும் மோசமான வெள்ளப் பாதிப்புகள்!

அடைமழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை! எங்கும் மோசமான வெள்ளப் பாதிப்புகள்!

708
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

1971-ஆம் ஆண்டில்தான் இத்தகைய மோசமான வெள்ளப் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியது. அதற்குப் பின்னர் இப்போதுதான் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தற்போது பெய்து கொண்டிருக்கும் அடை மழை தொடரும் என்றும் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மலேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்புகளை பொதுமக்கள் புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

மக்கள் அச்சப்பட வேண்டாம், வேண்டிய உதவிகளை நாங்கள் செய்வோம் என பிரதமர் இஸ்மாயில் சாப்ரி பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.