Home நாடு மூடா – பக்காத்தான் கூட்டணி அமையுமா?

மூடா – பக்காத்தான் கூட்டணி அமையுமா?

819
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 30) பிற்பகலில் பக்காத்தான் கூட்டணித் தலைவர்களும் மூடா கட்சியின் தலைவர்களும் சந்தித்து ஜோகூர் தேர்தலில் கூட்டணி தொகுதி உடன்பாடுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தவுள்ளனர்.

தொகுதிகள் பங்கீடு எண்ணிக்கை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்கனவே முடிவாகி அறிவிக்கப்பட்டு விட்டன.

அதன்படி மொத்தமுள்ள 56 தொகுதிகளில் பிகேஆர் கட்சியும், அமானாவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஜசெக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

#TamilSchoolmychoice

ஆனால், மூடா தேர்தல் உடன்பாடு கண்டால் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் சில தொகுதிகளை மூடாவுக்கு விட்டுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்காத்தானுடன் தொகுதிகள் பங்கீடு உடன்பாடு ஏற்படாவிட்டால், தேர்தல் அனுபவம் பெற மூடா தனித்துப் போட்டியிட முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு மூடா தனித்துப் போட்டியிட்டால் அதனால் மற்ற 3 கூட்டணிகளுக்குமே பாதிப்புகள் இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹாரப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய 3 கூட்டணிகள் ஜோகூர் தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.