கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக, நாடு முழுமையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பகாங்கில் இதுவரையில் 10 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
7 மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகளால் பாதிப்படைந்த சுமார் 41 ஆயிரம் பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
1971-ஆம் ஆண்டில்தான் இத்தகைய மோசமான வெள்ளப் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியது. அதற்குப் பின்னர் இப்போதுதான் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்புகளை பொதுமக்கள் புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.