Home One Line P2 புது டில்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது

புது டில்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது

566
0
SHARE
Ad

புது டில்லி: புது டில்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் காரணமாக காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்துள்ளதாக காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

டில்லியில் ஒட்டு மொத்த காற்று தர குறியீடு 325 என்ற அளவில் உள்ளது.

இது அண்டை மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் விவசாய கழிவுகளால் எற்பட்டது என புகார் எழுந்துள்ளன. ஆனால், பழைய வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலை கழிவுகளால் காற்றின் தரம் மோசமடைகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து காற்றில் மாசு அளவு குறைந்து காற்றின் தரமும் உயர்ந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் தொடர்ந்து, காற்றின் தரமும் மோசமடைந்து வருகிறது.