கோலாலம்பூர்: மை செஜாதெரா செயலி இனி பரந்த அளவில் இணைய அணுகலில் பயன்படுத்துவதை கட்டாயமாக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
சரியான பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் இன்னும் இருப்பதால், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நேற்று தெரிவித்தார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என்று அவர் கூறினார்.
இருப்பினும், இணைய அணுகல் இல்லாத பகுதிகளுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையின் கீழ் பெரும்பாலான வணிகங்களை திறக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
அனுமதிக்கப்பட்ட துறைகளில் துணிக்கடைகள், அழகுசாதன கடைகள், புகைப்படக் கடைகள், வாகன பாகங்கள் கடைகள் மற்றும் பல உள்ளன.
“துணிக்கடைகளில், துணிகளைத் தேர்வுசெய்ய வாடிக்கையாளர்களுக்கு கையுறைகளை வழங்க வேண்டும். அழகுசாதன கடைகள், ஒப்பனைகள் அனுமதிக்கப்படாது. புகைப்படக் கடைகள், ஒரு வாடிக்கையாளர் மற்றும் ஒரு புகைப்படக்காரரை மட்டுமே அனுமதிக்கும், ” என்று இஸ்மாயில் கூறினார்.
இதற்கான கட்டாய நடைமுறைகளில், முகக்கவசம் அணிவது, 37.5 பாகை செல்சியஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலையைக் கொண்ட வாடிக்கையாளர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாதது அடங்கும்.