கோலாலம்பூர்: நேற்று பெரும்பாலான வணிகங்கள் செயல்பட அனுமதிக்கும் அறிவிப்பை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இருப்பினும் அவை கடுமையான நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.
உணவகங்களில் உணவு உண்ண அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இது ஒரு மேசைக்கு இருவர் என்ற அடிப்படையில் நடைமுறை படுத்தப்படும்.
திறக்க அனுமதிக்கப்பட்ட வணிகங்கள் துணிக் கடைகள், கார் பாகங்கள், அழகுசாதன பொருட்கள், விளையாட்டு பாகங்கள், புகைப்படக் கடைகள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
துணிக் கடைகளில் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கையுறைகளைத் வழங்க வேண்டும்.
உணவகங்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.