Home One Line P2 மெல்போர்ன், கான்பெர்ரா நகரங்கள் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளன!

மெல்போர்ன், கான்பெர்ரா நகரங்கள் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளன!

840
0
SHARE
Ad

சிட்னி: ஆஸ்திரேலியா மெல்போர்ன் மற்றும் கான்பெர்ரா நகரங்கள் நேற்று திங்களன்று புகையால் சூழப்பட்டிருந்தன.

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் இருந்து அடர்த்தியான புகையின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த பணியக அதிகாரி டாம் டெலமோட்டே தெரிவித்துள்ளார்.

விக்டோரியாவிலிருந்து நகர்ந்த புகை மூட்டங்கள் மெல்போர்ன் உட்பட நகரின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளன.

#TamilSchoolmychoice

டாஸ்மேனியாவிலிருந்து வரும் புகை ஒரு முக்கிய காரணியாக இல்லை, ஆனால், இது நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் ஏற்பட்ட தீவிபத்தின் விளைவாகும்என்று டெலமோட் கூறினார்.

இதற்கிடையில், பலத்த காற்று ஏற்பட உள்ளதால் மெல்போர்னில் வருகிற வெள்ளிக்கிழமை வரை புகை மூட்டம் தொடரும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

இது இன்னும் மோசமான நிலையை எட்டுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை,”

ஆனால், நாளை (இன்று), இன்று (திங்கட்கிழமை) போலவே மோசமாக இருக்கலாம். புகை மூட்டம் வெள்ளிக்கிழமை வரை தொடரலாம், ”என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று வரை, கான்பெர்ரா மிக மோசமான காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளது.