Home உலகம் உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

728
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

இலண்டன் : பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவராகவும், தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் தீவிரவாதப் போக்குடைய ஜெரமி கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தோக்கியோ: கடந்த சில நாட்களாக ஜப்பானை உலுக்கிய வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 7 பேர் பலி – 15 பேர் காணவில்லை – ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன!

#TamilSchoolmychoice

மெக்கா: இராட்சத பளுதூக்கி விழுந்த விபத்தில் ஒரு மலேசியர் அடையாளம் காணப்பட்டார் – மேலும் எழுவரைத் தேடும் பணி தீவிரம்!

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டு கடல் பகுதியில் கவிழ்ந்த அகதிகள் படகு மீட்கப்பட்டதில் இதுவரை பெண்களும், குழந்தைகளும் உட்பட 34 சடலங்கள் மீட்பு!

சிங்கப்பூர்: பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் புதிய அமைச்சரவையை பிரதமர் லீ சியன் லுங் அமைப்பார்.