Home நாடு மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

681
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigal

கோலாலம்பூர்: செப்டம்பர் 16ஆம் தேதி கோலாலம்பூர் பெட்டாலிங் சாலை வணிகத்துக்கு மூடப்படும் – வணிகர்கள் முடிவு!

ஷா ஆலாம்: “மலாய் இனவாத அடிப்படையில் இல்லாமல், இஸ்லாமிய அடிப்படையில் போராடுங்கள்” – மலாய் தலைவர்களுக்கு பாஸ் தலைவர் ஹாடி அவாங் அறைகூவல்!

#TamilSchoolmychoice

புத்ரா ஜெயா: தொழிலாளர் கட்சி பார்ட்டி அமானா நெகாரா எனப் பெயர் மாற்றம் – சங்கப் பதிவகத்தின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்

ஈப்போ: “மலேசிய சீலாட் (மலாய் தற்காப்புக்கலை) சங்கம் ஏன் செப்டம்பர் 16இல் பேரணி நடத்துகின்றது?” – விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கேள்வி!

பினாங்கு: ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், வைகோ முயற்சியால் இந்திய அரசாங்கம் விதித்திருந்த குடிநுழைவு (விசா) தடை விலகி, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி இன்று சென்னை சென்று சேர்ந்தார்.