Home Featured நாடு பாங்காக் குண்டுவெடிப்பு: பிரதமர் நஜிப் கடும் கண்டனம்!

பாங்காக் குண்டுவெடிப்பு: பிரதமர் நஜிப் கடும் கண்டனம்!

572
0
SHARE
Ad

bangkok1கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – பாங்காங்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமான சதிகாரர்களின் செயலுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பாங்காங்கில் அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடிய தாக்குதல், இரண்டு மலேசியர்கள் உட்பட இன்னும் பலரின் உயிரைப் பறித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களும், பிரார்த்தனைகளும்” என்று நஜிப் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து அதிகாரிகளின் தகவல் படி, இந்த சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பாங்காக்கில் பிரபல சுற்றுலாத் தளமான இரவன் சிரினில் நேற்று இரவு 7 மணியளவில் (மலேசிய நேரப்படி 8 மணி) பைப் வெடிகுண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது.