Home வாழ் நலம் மாரடைப்பைத் தடுத்து கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கொளி!

மாரடைப்பைத் தடுத்து கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கொளி!

1519
0
SHARE
Ad

brokkoliஜூன் 4 – ப்ரோக்கோளி, காலிஃப்ளவர் போலவே இருக்கும். இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகின்றது.

புரோக்கோளியில், சர்க்கரை சத்து 1.7 கிராம், நார்ச்சத்து 2.6 கிராம், நீர்ச்சத்து 89.30 கிராம், கொழுப்புச்சத்து 0.37 கிராம், புரதம் 2.82 கிராம, சுண்ணாம்புச்சத்து 5%, வைட்டமின் ஏ 3%, இரும்புச்சத்து 6% அடங்கியுள்ளன. இது புற்று நோயிலிருந்து உடலை காக்கும் அருமையான பணியைச் செய்கிறது.

ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால், உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.

#TamilSchoolmychoice

brokkoli,.புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் எனும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறது. உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறது.

தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும். இதனைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்கும்.

broccoliஇரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு. பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும்.

அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது.