Home நாடு ஒரு நாய்க்குப் பத்து ரிங்கிட் சன்மானமா? தஞ்சோங் மாலிம் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது!

ஒரு நாய்க்குப் பத்து ரிங்கிட் சன்மானமா? தஞ்சோங் மாலிம் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது!

662
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம், ஜூன் 4 – பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களின் வழி சமுதாயத்தில் பல நன்மை பயக்கும் மாற்றங்கள் நிகழ வைக்கலாம் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் நேற்று அரங்கேறியிருக்கின்றது.

பேராக் மாநிலத்தின் தஞ்சோங் மாலிம் நகரசபை, தங்களின் தஞ்சோங் மாலிம், சிலிம்ரிவர் வட்டாரங்களில் பெருகிவரும் அனாதை நாய்களை ஒழிப்பதற்காக ஒரு திட்டத்தை அறிவித்தனர். அதன்படி அனாதை நாயைக் கொண்டு வந்து ஒப்படைப்பவர்களுக்கு தலா பத்து ரிங்கிட் வழங்கப்படும் என அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றில் அறிவித்தனர்.

Tanjong Malim dog campaign

#TamilSchoolmychoice

செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட குழுக்கள் பலர் உடனடியாக இந்த மனிதாபிமானமற்ற  செயலைக் கண்டித்து, பேஸ்புக் பக்கங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பு சுழல் முறையில் விரைவாக மக்களிடையே பகிரப்பட்டதைத் தொடர்ந்து பலரும் தஞ்சோங் மாலிங் நகரசபையின் நடவடிக்கையைக் கண்டித்தனர்.

அதனைத் தொடர்ந்து செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்கள் ஏராளமான அளவில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு காட்டத் தொடங்கினர்.

Ong Ka Tingகுறிப்பாக முன்னாள் அமைச்சரும், மசீச கட்சித் தலைவருமான ஓங் கா திங் (படம்) இதில் உடனடியாகத் தலையிட தொடர்ந்து தஞ்சோங் மாலிம் நகரசபையினர் தங்களின் அறிவிப்பையும், திட்டத்தையும் உடனடியாகக் கைவிட்டனர்.

பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் இதில் தலையிட்டு இந்த திட்டம் கைவிடப்படுவதை உறுதி செய்தனர்.

அனாதை நாய்களை ஒழிப்பது முக்கியம்தான் என்றாலும், அதற்கான முறையான மனிதாபிமான முறையிலான வழிமுறைகளை அதிகாரிகள் வரையறுக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக, அனாதையாகத் திரியும் நாய்களைப் பிடித்து அவற்றை மலடுகளாக்கி விடுவதன் மூலம், இந்த நாய்களின் இனப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஒரு வளர்ப்புப் பிராணிகள் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இதுபோன்ற சமூகப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களின் மூலம் தடுத்து விட முடிகின்றது என்பதுதான்.