Home இந்தியா அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

776
0
SHARE
Ad

article-2291237-188E2F05000005DC-500_634x286புதுடில்லி, ஜூன் 4- அகில இந்திய அளவில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரையடுத்து, தேர்வு முடிவுகளை அறிவிக்க வருகிற 9- ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3- ஆம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.அதன் முடிவுகள் நாளை வெளியாக இருந்தன.

இந்நிலையில்,இத்தேர்வில் முறை கேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக நடந்த விசாரணையில் 12 பேரை அரியானா காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில்,இத்தேர்வை நீக்கி விட்டு மீண்டும் நியாயமான முறையில் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர் மற்றும் பெற்றோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் பிரபுல்ல சி.பந்த், அமிர்தவ ராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.

இவ்விசாரணையில், இந்த முறை கேட்டின் மூளையாக ரூப்சிங் டேங்கி என்பவர் செயல்பட்டுள்ளார் என்பதும், அவர் வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  விடைகளை அனுப்பியுள்ளார் எனபதும் தெரிய வந்துள்ளது.சம்பந்தப்பட்ட அந்நபர் தற்போது தலை மறைவாகி விட்டார்.

அவரை விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள்,இந்த முறைகேடு குறித்த விரிவான அறிக்கையை அரியானா காவல்துறை  தாக்கல் செய்த பிறகு இந்தத் தேர்வின் முடிவினை அறிவிப்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும்,வருகிற 9 -ஆம் தேதி வரை முடிவுகளை அறிவிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.