Home இந்தியா மருத்துவ மாணவர் சேர்க்கை: 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை இரத்து

மருத்துவ மாணவர் சேர்க்கை: 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை இரத்து

872
0
SHARE
Ad

chennai-high-courtசென்னை – மருத்துவ சேர்க்கைக்கு 85 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியிருக்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இரத்து செய்தது.

“மருத்துவ சேர்க்கைக்கு தமிழக அரசு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியிருப்பது மாணவர்கள் மத்தியில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே தமிழக அரசின் அரசாரணையை ரத்து செய்கிறேன்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், புதிய தர வரிசையை பட்டியலை தயாரித்து கலந்தாய்வு நடத்தும் படியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.