Home கலை உலகம் திரைவிமர்சனம்: பண்டிகை – கொண்டாட முடியவில்லை.. ஆனால் ரசிக்கலாம்!

திரைவிமர்சனம்: பண்டிகை – கொண்டாட முடியவில்லை.. ஆனால் ரசிக்கலாம்!

1086
0
SHARE
Ad

Pandigai4மதுசூதனன் ராவ் மிகப் பெரிய தாதா. சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம், குத்துச் சண்டை உள்ளிட்டவைகளை நடத்தி பல பேரை மோசடி செய்கிறார்.

அவரது வலையில் சரவணன் விழுந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இழந்து விடுகிறார். அதனை மீட்க கிருஷ்ணாவின் உதவியை நாடுகிறார்.

கிருஷ்ணா, சரவணனின் சொத்துக்களை மீட்டுக் கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் கிளைமாக்ஸ்.

#TamilSchoolmychoice

ரசிக்க

Pandigai2 (2)கொஞ்சம் வித்தியாசமானக் கதையோட்டமும், எதார்த்தமாகக் கதை சொல்லிய விதமும் படத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

கிருஷ்ணா கட்டுமஸ்தாகக் காட்சியளிப்பதோடு, அந்தக் கதாப்பாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார்.

ஆனந்தி அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பதற்கான இடங்கள் வெகு குறைவு.

சரவணன், மதுசூதனன் ராவ், நிதின் சத்யா ஆகிய மூவரின் நடிப்பும் கதைக்கு பக்கபலம் சேர்த்திருக்கிறது.

பாண்டி, கருணாஸ் இவர்களோடு ஆதித்யா தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் ஆகியோரின் காமெடி ரசிக்க வைக்கின்றது. அதிலும் குறிப்பாக வீட்டில் திருடப் போகும் போது வரும் காமெடிக் காட்சிகள் ரசனை.

Pandigai3அரவிந்த் ஒளிப்பதிவில் சூதாட்டம் நடைபெறும் இடங்கள், பழைய கட்டிடங்கள் ஆகியவை படம் பிடிக்கப்பட்டிருக்கும் விதம் ரசிக்க வைக்கின்றது.

முதல் பாதியில் திரைக்கதை சற்று மெதுவாகச் சென்றாலும் கூட, இரண்டாம் பாதியில் வேகமெடுத்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

சலிப்பு

Pandigai2 (1)படம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் போது இடை இடையே ஆனந்தி உடனான காட்சிகள் எரிச்சலடையவே செய்கின்றன.

பல இடங்களில் வரும் அதிக சத்தத்துடன் கூடிய பின்னணி இசை காதைப் பிளக்கிறது. ரசிக்க முடியவில்லை.

பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் பண்டிகை – கொண்டாட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாம் பாதி விறுவிறுப்பை கொஞ்சம் ரசித்துவிட்டு வரலாம்.

-ஃபீனிக்ஸ்தாசன்