Home வாழ் நலம் மூல நோயைக் குணப்படுத்தும் கருணைக்கிழங்கு!

மூல நோயைக் குணப்படுத்தும் கருணைக்கிழங்கு!

2561
0
SHARE
Ad

2329935739_d4dccb134cஜூன் 5 – அதிக உடல் எடை, மூட்டுவலி, முதுகுத் தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படுவோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு. மூல நோயைக் கட்டுப்படுத்த கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது.

ஆசன வாயில் ஏற்பட்டுள்ள மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.  ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மட்டும் வேக வைத்து, அப்படியே உணவாகச் சாப்பிட்டு வந்தால், மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை அவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

#TamilSchoolmychoice

IMG_6246 - Copyமற்ற கிழங்குகளைவிட கருணைக் கிழங்கு சுலபமாக ஜீரணமாவதால், வயிற்றில் வாயுக் கோளாறைப் போக்கும். பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது,

மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையைக் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள்.

“வன சூரணாதி’ என்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.