Home இந்தியா கின்னஸ் சாதனை விழா: பன்னாட்டுக் கருத்தரங்கு!

கின்னஸ் சாதனை விழா: பன்னாட்டுக் கருத்தரங்கு!

988
0
SHARE
Ad

 

unnamed

சென்னை, ஜூன் 5 – தமிழின் பெருமையினைப் பல்லாற்றானும் உலகிற்கு உணர்த்தி வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையும், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், பதிப்புத்துறையில் வைர விழா காணும் சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று தொடங்கியது.

#TamilSchoolmychoice

இக்கருத்தரங்கில் மறைந்த-வாழும் தமிழறிஞர்களின் வாழ்வும் பணியும், 351 தமிழறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பெற்ற 351 நூல்களும் நாளை 5 ஜூன் – 6 ஜூன் 2015 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு உலக கின்னஸ் சாதனை படைக்கவுள்ளது.

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல்துறைப்  பேராசியர் முனைவர் எஸ்.குமரனின் தலைமையில் ஏறத்தாழ 30 பேராளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்நிகழ்வு உலகச் சாதனையாக அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.