சென்னை, மே 21 – கமலஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கலக்கிய விஸ்வரூபம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி, அல் கொய்தாவில் முக்கிய தலைவர், பெண் தன்மை கொண்ட கதக் கலைஞர், இந்திய உளவாளி என பன்முகத்தன்மை கொண்ட கதாபத்தித்தில் நடித்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்திய கமலின் இந்த படம், இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளையும் கவர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் பற்றி இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் தனது சகாக்களுடன் உரையாடி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த தகவலின் படி, இந்தியன் முஜாஹிதீன் தலைவன் ரியாஸ் பத்கல் விஸ்வரூபம் படத்தை விரும்பிப் பார்த்ததாகவும், குறிப்பாக படத்தில் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவரான கமல் அல் கொய்தாவுடன் இணைவது தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும், 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது இந்தியக் கிளை குறித்த அறிவிப்பை அல் கொய்தா வெளியிட்டது. ஆனால் கமல், தனது படத்தில் அதற்கு முன்பே அதனை தெரிவித்து இருப்பது தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக அவன் கூறியுள்ளான்.
கமல், தீவிரவாதியாலும் ரசிக்கத்தக்கவராக இருப்பதை அவரது ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அடுத்த படத்தில் இதைவைத்து ஏதேனும் தடை வந்து விடப் போகிறது என்ற பயம் கமல் மனதில் எழுந்திருக்கலாம்.