Home கலை உலகம் விஸ்வரூபம் இரண்டாம் பாகம்! கடைசி கட்ட படப்பிடிப்பு!

விஸ்வரூபம் இரண்டாம் பாகம்! கடைசி கட்ட படப்பிடிப்பு!

794
0
SHARE
Ad

சென்னை,பிப்.7- கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்று  தமிழகமெங்கும் வெளியாகிறது. கமல்ஹாசன் நீண்ட நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்த  படமே இப்போது தான் வெளியாகவிருக்கிறது.

ஆனால் அதற்குள் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் வெளியிட செய்யவிருக்கிறாராம்.

விஸ்வரூபம் படத்தின் விளம்பர வேலைகளில் ஒரு சமயத்தில் மும்மரமாயிருந்த கமல் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் “ அடுத்த படத்திற்கு ‘மூ’ என்று பெயர் வைத்துள்ளேன். விரைவில் அந்த பெயரை பதிவு செய்யவிருக்கிறேன்” எனக் கூறினார். ’மூ’ என்றால் மூன்று பேர் என்று பொருள். இதனால் கமல் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்றும் பேசப்பட்டு வந்தது. விஸ்வரூபமும், ’மூ’வும் ஒரே மாதிரியான கதைக்களம் என்பதால் கமல் விஸ்வரூபம் எடுக்கும் போதே ‘மூ’ படத்திற்கு தேவையான காட்சிகளையும் படமாக்கிவிட்டாராம்.
இதுவரையில் 75 சதவீத  படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கடைசி கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது.  மீதமுள்ள படத்தை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.
விஸ்வரூபம் படத்தின் வில்லன் முல்லா உமர் உயிரோடு தப்புவது போன்று முதல் பாகம் முடிந்துள்ளது.‘தப்பிச் சென்ற முல்லா உமரை, இந்தியாவில் சுற்றிவளைத்து  பிடிப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.