Home கலை உலகம் தேசிய விருதுகள் – விஸ்வரூபத்துக்கு 2, பரதேசிக்கு 1

தேசிய விருதுகள் – விஸ்வரூபத்துக்கு 2, பரதேசிக்கு 1

834
0
SHARE
Ad

Paradesi-Sliderசென்னை,மார்ச்.18- இந்தியாவின் 60ஆவது தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு என பல பிரிவுகளில் தேசிய விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பரதேசிக்கு சிறந்த உடையலங்காரத்துக்காக ஒரேயொரு விருது மட்டுமே கிடைத்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழைப் பொறுத்தவரை சிறந்த  மொழி திரைப்படத்துக்கான விருது பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்1819  படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த ஒப்பனைக்கான விருதையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது.

#TamilSchoolmychoice

விஸ்வரூபம் சிறந்த நடனம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என்ற இரு பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. பரதேசிக்கு சிறந்த உடை வடிவமைப்பு பிரிவில் மட்டுமே விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகராக இர்பான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பான் சிங் தோமர் படத்துக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. அவருடன் மராத்தி படமான அனுமதியில் நடித்த விக்ரம் கோகலேயும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருவரும் விருதை பகிர்ந்து கொள்வார்கள்.

வித்யா பாலன் நடித்த கஹானி படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படத்துக்கான விருது இந்திப் படமான பான் சிங் தோமருக்கு கிடைத்துள்ளது. சிட்டகாங் படத்தில் பாடிய சங்கர் மகாதேவனுக்கு சிறந்த பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விந்து தானத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட விக்கி டோனர் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதையும், அப்படத்தில் நடித்த அனு கபூர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும், டாலி அலுவாலியா சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.