Home உலகம் 4 வருடங்கள் கழித்து நாடு திரும்பும் முஷாரப்

4 வருடங்கள் கழித்து நாடு திரும்பும் முஷாரப்

698
0
SHARE
Ad

indexபாகிஸ்தான், மார்ச்.18- கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானில்  நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர்  முஷாரப் (படம்) துபாய் மற்றும் லண்டன் ஆகிய  நாடுகளில் வசித்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக வெளி நாடுகளில் தங்கியிருந்ததோடு அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கினார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி முடிவடைந்ததை தொடர்ந்து தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து வருகிற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிட வசதியாக வருகிற 24-ந் திகதி முஷாரப்,  பாகிஸ்தான் திரும்பிய அன்றே விமானம் மூலம் கராச்சி வந்து அவரது கட்சியினர் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணியில் கலந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

இப்பேரணியில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தும் 200 பேர் பங்கேற்கின்றனர். பாகிஸ்தான் திரும்பியதும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் முஷாரப் போட்டியிடப் போவதாக அவரே நேற்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை உள்ளிட்ட பல வழக்குகள் முஷாரப் மீது உள்ளன. அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை இருந்ததால் பெனாசிர் கொலை வழக்கு விசாரணையில் அவர் நேரில் ஆஜராகவில்லை.

எனவே, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக ராவல் பிண்டி தீவிரவாத தடுப்பு கோர்ட்டு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவர் வருகிற 24-ம்  திகதி பாகிஸ்தான் திரும்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.