Home இந்தியா பண்ருட்டி இராமச்சந்திரன் மீண்டும் அதிமுகவில் இணையலாம்-விஜயகாந்த் மீது அதிருப்தியா?

பண்ருட்டி இராமச்சந்திரன் மீண்டும் அதிமுகவில் இணையலாம்-விஜயகாந்த் மீது அதிருப்தியா?

964
0
SHARE
Ad

Vijaykanth-Sliderசென்னை, மார்ச் 18 –  தேமுதிக வின் அவைத்தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அக்கட்சியை விட்டு விலகி மீண்டும் அதிமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த சில மாதங்களாக தேமுதிகவினர் அவ்வப்போது கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

பண்ருட்டியார் முடிவால் தேமுதிகவினர் அதிர்ச்சி

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,இப்போது பண்ருட்டியாரும் விலகக்கூடும், என்பது ஆருடமாக இல்லாமல் உண்மையாகி விடுமோ என்ற அதிர்ச்சியில் விஜயகாந்த் உள்பட தேமுதிக கட்சியினரும் உள்ளனர்.

கடந்த ஒரு வருடமாகவே கட்சியின் செயல்பாடுகளால் பண்ருட்டி இராமச்சந்திரன், அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தேமுதிக ஆரம்பித்து பல வருடங்களாகியும் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்லமுடியாத நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தப் பிறகு தான், சட்டப்பேரவையில் இந்த அளவுக்கு இடங்களைப்பிடித்து, எதிர்க்கட்சி அந்தஸ்த்தைப் பெற அக்கட்சியால் முடிந்தது.

அவ்வாறிருக்க நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க அதிமுக கூட்டணியில் நீடித்திருந்தால், இரண்டு இடங்களையாவது பெற்றிருக்கலாம் என்பதை விடுத்து அந்த கூட்டணியை முறித்ததோடு அல்லாமல், விஜயகாந்த் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவுடன் உடன்பாடு வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே பண்ருட்டியாரை  அக்கட்சித்தலைமை மீது வெறுப்பேற்றியிருப்பதாக நம்பப்படுகிறது,

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதையே காரணம் காட்டி அவர் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவார் என நம்பப்படுகிறது.

எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பண்ருட்டி    

திமுகவிலிருந்து  எம்.ஜி.ஆர் விலகியபோது, அவருடனேயே விலகி அவரது அமைச்சரவையிலேயே அமைச்சராகவும் இருந்தவர் பண்ருட்டி இராமச்சந்திரன்.

தொடர்ந்து ஜெயலலிதா அதிமுக தலைமைப் பொறுப்பேற்ற போதும், அவருடன் கட்சியில் இருந்து, பின் விலகியவர் பண்ருட்டியார்.

பல முறை தனது பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பண்ருட்டி இராமச்சந்திரன் என்பதும், எம்ஜிஆர் காலத்தில் அவருடன் நெருக்கமான அமைச்சராக இருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.