Home நாடு போர்ட் கிள்ளான் ஸ்ரீ நாகம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகம்

போர்ட் கிள்ளான் ஸ்ரீ நாகம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகம்

789
0
SHARE
Ad

indexபோர்ட் கிள்ளான், மார்ச்.18-  பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான போர்ட் கிள்ளான் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக இன்று நடந்தேறியது.

மகா கும்பாபிஷேக விழாவில் கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத் துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன்,  டத்தோ கென்னத் ஈஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

23 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் நன்கொடையாளர்களின் ஆதரவினால் குறுகிய காலத்தில் சீரமைக்கபட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

மகா கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.